துருக்கியில் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்டநிலநடுக்கத்தில் இருந்து காணாமல் போன இந்தியர் ஒருவர் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்தார் என்று துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இறந்தவர், விஜய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் துருக்கிக்கு வணிக பயணமாக சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் கோட்வார் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வார தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அவர் வணிக பயணமாக சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.
அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது உடலை அவரது குடும்பத்தினருக்கு விரைவாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், சிரிய எல்லைக்கு அருகில் உள்ள காசியான்டெப் அருகே, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இரண்டாவது ஒன்பது மணி நேரம் கழித்து நிகழ்ந்தது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 28,000 ஐ கடந்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…