துருக்கி நிலநடுக்கத்தில் இறந்த இந்தியரின் உடல் ஹோட்டல் இடிபாடுகளுக்கு இடையே கண்டுபிடிப்பு !

Default Image

துருக்கியில் பிப்ரவரி 6 அன்று  ஏற்பட்டநிலநடுக்கத்தில் இருந்து காணாமல் போன இந்தியர் ஒருவர் மாலத்யாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு அடியில் இறந்து கிடந்தார் என்று துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இறந்தவர், விஜய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்  துருக்கிக்கு வணிக பயணமாக சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் கோட்வார் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த வார தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அவர் வணிக பயணமாக சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது உடலை  அவரது குடும்பத்தினருக்கு விரைவாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம், சிரிய எல்லைக்கு அருகில் உள்ள காசியான்டெப் அருகே, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இரண்டாவது ஒன்பது மணி நேரம் கழித்து நிகழ்ந்தது, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 28,000 ஐ கடந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்