காசாவில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர் உடல் .!

காசாவில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தினரால் ஷானி லூக்  உடல் கண்டெடுக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேல் அரசு இன்று உறுதி செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20 நாள்களுக்கு மேல் நடந்து வருகிறது. இருதரப்பும் போரை  நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலால் இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.  இதற்கிடையில், அப்போது இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஒரு பெண் கடத்தப்பட்டு கொன்று ஜீப் ஒன்றின் பின்புறம் நிர்வாண நிலையில் உடலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. அந்த வீடியோவில் அந்தப் பெண் உடல் மீது ஹமாஸ் குழுவினர் தங்களுடைய கால்களை வைத்துக் கொண்டு இருந்தனர். மேலும், இந்தச் சடலம் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை உடல் என ஹமாஸ்  குழு தெரிவித்திருந்தது.

ஹமாஸ் குழுவினரால் கொல்லப்பட்டு நிர்வாண நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட உடல் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை இல்லை என்னுடைய மகள் உடல் என ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்தார்.  இந்த வீடியோ தொடர்ந்து கொல்லப்பட்ட பெண் ஜெர்மனியை சார்ந்த  பச்சை குத்தும் கலைஞரான ஷானி லூக் என்றும்  ஒரு இசை நிகழ்ச்சிக்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார் என்பது தெரியவந்தது. மேலும் அந்த வீடியோவில் என் மகளின் உடலை மட்டுமாவது திரும்ப கொடுத்துவிடுங்கள். என் மகளின் உடலை மீட்பதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில்,  காசாவில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தினரால் ஷானி லூக்  உடல் கண்டெடுக்கப்பட்டதை அவரது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேல் அரசு இன்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அவரது சகோதரி ஆதி லாக் சமூக வலைதளங்களில் கூறுகையில், “எங்கள் சகோதரியின் மரணத்தை நாங்கள் உறுதி செய்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது ” என தெரிவித்தார்.

காசா மற்றும் இஸ்ரேல் எல்லையை ஒட்டிய கிராமப்புற நிலத்தில் அக்டோபர் 7 அன்று நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி அதற்காக நடத்தப்பட்ட இசை திருவிழாவில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷானி லூக் என்ற  இளம்பெண்ணும் தனது தோழியுடன் சென்று கலந்து கொண்டுள்ளார்.  திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலால் இசை திருவிழாவில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் ஓடியுள்ளனர் அப்போதுதான் ஷானி லூக் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi