பெரு : கடந்த 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பனி உருகியதால், அவரின் உடைமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர். வில்லியம் ஸ்டாம்ப்லின் உடல் கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு முகாமுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
தென் அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து கரீபியனில் உள்ள கண்டத்தின் வடக்குக் கடற்கரை சுமார் 6,768 மீட்டர் உயரமுள்ள ஆண்டஸ் மலையை அளக்க முயன்றபோது, பனிச்சரிவு ஏற்பட்டது, அதில் மூன்று மலை ஏறுபவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 58 வயதான வில்லியமின் உடல் மற்றும் ஆடைகள் கடும் உறைபனி காரணமாக இத்தனை ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டதாக அன்காஷ் பிராந்தியத்தில் உள்ள போலீசார் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
மேலும் குளிரால் பாதுகாக்கப்பட்ட அவரது உடையின் இடுப்பு பைக்குள் அவரது ஓட்டுநர் உரிமமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம், அவர் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ கவுண்டியில் உள்ள சினோவில் வசிப்பவர் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…