பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடல்.. 22 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு.!

American climber William Stampfl

பெரு : கடந்த 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பனி உருகியதால், அவரின் உடைமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர். வில்லியம் ஸ்டாம்ப்லின் உடல் கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு முகாமுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.

தென் அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து கரீபியனில் உள்ள கண்டத்தின் வடக்குக் கடற்கரை சுமார் 6,768 மீட்டர் உயரமுள்ள ஆண்டஸ்  மலையை அளக்க முயன்றபோது, ​​பனிச்சரிவு ஏற்பட்டது, அதில் மூன்று மலை ஏறுபவர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் 58 வயதான  வில்லியமின் உடல் மற்றும் ஆடைகள் கடும் உறைபனி காரணமாக இத்தனை ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டதாக அன்காஷ் பிராந்தியத்தில் உள்ள போலீசார் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

மேலும் குளிரால் பாதுகாக்கப்பட்ட அவரது உடையின் இடுப்பு பைக்குள் அவரது ஓட்டுநர் உரிமமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம், அவர் கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோ கவுண்டியில் உள்ள சினோவில் வசிப்பவர் என்று தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்