இத்தாலி கடற்கரையில் படகு மூழ்கி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு..51 பேர் மாயம்..!

Boatsink

இத்தாலிய தீவான லம்பெடுசாவில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் மூழ்கியதில் ஒரு பெண் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது 4 பேர் இறந்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து ஒரு படகில் 48 பேரும் மற்றொரு படகில் 42 பேரும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு பிறகு முதலில் ஒரு பெண் மற்றும் அவரது ஒரு வயது குழந்தையின் உடல்களை மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

ஸ்ஃபாக்ஸில் உள்ள அதிகாரிகள் புலம்பெயர்ந்தவர்களை அடையாளம் காண முயற்சிப்பதாகவும், புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், ஸ்ஃபாக்ஸுக்கு அருகிலுள்ள கடற்கரையில் 10 புலம்பெயர்ந்தோரின் உடல்களைக் கண்டுபிடித்ததாக துனிசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விபத்திலிருந்து 57 புலம்பெயர்ந்தவர்களை மீட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் இத்தாலியின் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்