அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

America Blizzard

அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் தீ பரவி வரும் சூழலில் தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் மிசிகன், நியூயார்க், பின்சில்வேனியா, மற்றும் மற்ற சில மாநிலங்களில் பனிப்புயல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த புயலின் காரணமாக உயிரிழப்பு சம்பவம் 2,100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து. சாலை போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகள், அலுவலகங்கள் மூடல் என பெரும் தாக்கத்தை பனிப்புயல் உண்டு செய்துள்ளது.

இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது. இதன் காரணமாக, மாகாணங்களின் சில பகுதிகளில் பல லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.அவசரநிலைகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு பதிவான பனிப்புயல் அளவு 23 செ.மீ ஆகும். இந்த செ.மீ என்பது இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியது.

அந்த அளவுக்கு கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது என்பதால் நகரத்தின் முழுப்பகுதியும் வெள்ளை பனியில் மூடப்பட்டிருப்பது போல காட்சியளிக்கிறது. மேலும், கடும் பனிப்புயலின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  அது மட்டுமின்றி, பனிப்புயலின் தாக்கத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மிகக் குறைந்த வெப்பநிலையால் உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்கு குறைந்து, சிலர் ஹைப்போதர்மியாக (Hypothermia) பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் எனவும், பனிமூடப்பட்ட மற்றும் சறுக்கலான சாலைகளில் வாகன விபத்துகள் ஏற்பட்டன அதில் ஒரு சிலர் உயிரிழந்தனர் என்றும் மூச்சுத்திணறல் போன்ற அவசர சிகிச்சை இல்லாமல் சிலர் உயிரிழந்தார்கள் எனவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்