ஹிஸ்புல்லா ‘ரகசிய’ குழியில் பல்லாயிரம் கோடி! அழிக்க எச்சரிக்கை கொடுத்த இஸ்ரேல்!
ஹிஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு குழியில் உள்ள பணம் மற்றும் தங்கத்தை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் நிதி சோர்ஸ்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதில், தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட காரணத்தால் ஹிஸ்புல்லா அமைப்பின் பொருளாதார சோர்ஸ்கள் அழிக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலின் போது தான், ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள ரகசிய பதுங்கு குழியை இஸ்ரேல் எதிர்ச்சியாகக் கண்டுபிடித்தது.
இந்த ரகசிய பதுங்கு குழி பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த ரகசிய பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் தோண்டத் தோண்ட.. தங்கம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவமே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
ரூ.4201 கோடி
இஸ்ரேலின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இந்த விஷயம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது ” ஹிஸ்புல்லா அமைத்துள்ள இந்த பதுங்கு குழி நேரடியாக பெய்ரூட்டின் மையத்தில் அல்-சஹேல் மருத்துவமனையின் கீழ் ரகசியமாக அமைந்துள்ளது. நாங்கள் இதனை எங்களுடைய உளவுத்துறை மூலம் கண்டுபிடித்தோம்.
உள்ளே இப்போது பதுங்கு குழிக்குள் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பணம் மற்றும் தங்கம் உள்ளது. மொத்தமாக, 500 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது (இந்திய மதிப்பின் படி ரூ.4201 கோடி ) அளவிற்கு நிதி இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் எச்சரிக்கை
தொடர்ந்து பேசிய அவர் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை பற்றிய தகவலையும் தெரிவித்தார். அதாவது “இன்னும் இந்த இடங்களில் தாக்குதல் நடத்தவில்லை. கண்டிப்பாகத் தாக்குதல் நடத்தி உள்ளே இருக்கும் பணம் மற்றும் தங்கத்தை அழிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
பதுங்கு குழியில் வைத்து இருக்கும் இந்த பணத்தை வைத்து அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே, நாங்கள் ஒரு போதும் அவர்கள் எங்களைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம். எனவும் இஸ்ரேல் கூறி உள்ளது. அதே சமயம் இந்த விஷயங்களை பற்றிப் பேசிய போது, அந்த இடத்தைக் தாக்குதல் நடத்தக் கண்காணித்து வரும் இஸ்ரேலிய விமானப்படை, மருத்துவமனையைத் தாக்குவதைத் தவிர்க்கும் எனவும் ஹகாரி தெளிவாகக் கூறினார். எனவே, எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.