“பைடன், கமலா ஹாரிஸுக்கு ஹிந்துக்கள் மீது அக்கறை இல்லை”! விமர்சனம் செய்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் டிரம்ப், பைடன், கமலா ஹாரிஸை விமர்சனம் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Donald Trump

வாஷிங்க்டன் : வரும் நவம்பர்-5 ம் தேதி அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இருவரும் தீவிரமாய் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், கமலா ஹாரிஸுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வாழும் இந்து மக்களுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாழ்த்து பதிவில் அதிபர் ஜோ பைடனையும், கமலா ஹாரிசையும் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த பதிவில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமாலா ஹாரிசுக்கும் இந்துக்கள் மீது அக்கறையில்லை. வங்காளதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

இந்து மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இப்படி நடக்க விட மாட்டேன். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கமலாவும், பைடனும் புறக்கணித்துவிட்டார்கள்.

இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் கமலாவும், ஜோ பைடனும் பெரிய இடராக நமக்கு அமைந்துவிட்டார்கள். ஆனால், நான் ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவேன். வலிமை மூலம் உலகில் அமைதியை திரும்பக் கொண்டு வருவேன்.

மேலும், இடது சாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து அமெரிக்க இந்துக்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். இந்துக்களின் விடுதலைக்காக நாங்கள் போராடுவோம்.

எனது நிர்வாகத்தின்கீழ், இந்தியாவுடனான நமது அளப்பறியா பங்களிப்பையும், எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடனான உறவையும் நாம் நிச்சசயம் வலுப்படுத்துவோம். கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சிறு வணிகத்தையெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் அழித்துவிடுவார்.

ஆனால், என்னுடைய தலைமையிலான நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன் மூலம், வரலாற்றில் மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும். அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடக மாற்றுவோம்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல் வாழ்த்துகள். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்”, என டோன்லட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu