குவாத்தமாலா அதிபர் தேர்தலில் பெர்னார்டோ அரேவலோ வெற்றி.!
ஊழல் எதிர்ப்புப் போராளி பெர்னார்டோ அரேவலோ குவாத்தமாலாவின் ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
டிஎஸ்இ தேசிய தேர்தல் அமைப்பின் கணக்கின்படி, 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அரேவலோ 58 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரது போட்டியாளரான சாண்ட்ரா டோரஸ் 36 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி வெற்றியைக் கொண்டாடினர். அவரது வெற்றி நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும் என்று தெரிவித்தனர்.