நன்மைகள் நிறைந்த பறவை எச்சில் சூப்.. சீன மக்கள் சுவைக்கும் வினோதம்!

bird saliva soup

சீனாவில் வினோதம்: பறவையின் எச்சில் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்-ஐ சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு சிறிய சீன பறவையான ஸ்விஃப்ட்லெட்டின் கூடுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும், இது குறித்து சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைதளத்தின் ஆதிக்கத்தால், பறவை எச்சில் சூப், உலகம் முழுவதும் அறியப்பட்டு, அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. வெறும், 500 கிராம் உலர்ந்த பறவை கூடின் விலை ரூ.1.6 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

அட ஆமாங்க… சீனாவின் பழமையானதாகவும் சுவையானதாகவும் கருதப்படும் பறவை கூடு சூப் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது. இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் சமீபத்தில், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக அழகு துறையில் பிரபலமடைந்துள்ளது.

மலேசியா, தாய்லாந்து போன்ற பல இடங்களில், மக்கள் தங்கள் கூடுகளை சேகரிக்க ஸ்விப்லெட் பண்ணையை ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக வருவாய் கிடைப்பதால், காலி வீடுகளை ஸ்விஃப்ட்லெட் வீடுகளாகப் மாற்றி பண்ணையாக பயன்படுத்துகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Wendy Cung Ly (@wendyskin)

பறவைக் கூடு சூப்

பறவைக்கூடு சூப் (Bird’s Nest Soup) என்பது சீன பாரம்பரிய உணவாகும். இதற்கு பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் பறவைக்கூடு. இதை சுவையூட்ட சிக்கன் ப்ரோத் மற்றும் கடல் உணவுகளுடன் சேர்த்து சமைக்கின்றனர். இதில், சிறப்பான சுவையும் மருத்துவ பலன்களும் உள்ளன என்று நம்பப்படுகிறது.

நன்மைகள் நிறைந்தது:

ஆசிய நாட்டின் பறவையின் எச்சில் நிறைந்த அந்த கூட்டில் கிளைகோபுரோட்டின்கள், கொலாஜன், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாகவும், சுருக்கங்களைக் குறைப்பதாகவும், இளமைத் தோற்றத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.

அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பாரம்பரிய சீன மருத்துவத்தில் பறவையின் கூடு நீண்டகாலமாக பயன்படுத்தப்படுவது அதன் நவீன தோல் பராமரிப்பு பயன்பாடுகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Golden Nest Inc (@goldennestusa)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்