பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.. மகப்பேறு விடுப்பு.! பெல்ஜியத்தில் புதிய சட்டம்.!

Belgium Govt has introduced a new law for Sex Workers

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது.

உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தி அங்கீகரித்துள்ளது பெல்ஜியம் அரசு. அந்நாட்டு அரசு கடந்த வார வெள்ளிக்கிழமை இதனை அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் 93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பாவின் முதல் நாடு :

2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் நாடாக பாலியல் தொழிலாளர்களை சுய தொழில் செய்பவர்களாக அங்கீகரித்தது பெல்ஜியம் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.The Telegraph செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, பாலியல் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெல்ஜியம் அரசு அங்கீகரித்துள்ளது.

ஓய்வூதியம், மகப்பேறு விடுப்புகள்..

இந்த சட்டத்தின் படி, பாலியல் தொழிலாளர்கள், உடல்நலக் காப்பீடு,  வேலையின்மை காலத்தில் ஓய்வூதியம், அவர்களின் குடும்ப நலன்கள், அவர்களுக்கான குறிப்பிட்ட கால இடைவெளி விடுமுறைகள், மகப்பேறு விடுப்புகள் ஆகியவை வழங்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உரிமை :

பாலியல் தொழிலாளருக்கு ஒரு வாடிக்கையாளரை பிடிக்கவில்லை என்றாலோ, குறிப்பிட்ட பாலியல் செயல் பிடிக்கவில்லை என்றாலோ அதனை மறுக்கும் உரிமை தொழிலாளருக்கு உண்டு என்றும்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று வேலைக்கு செல்லலாம் :

இந்த சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியபடி பாலியல் செயலைச் செய்ய அவர்களுக்கு உரிமையுண்டு, மேலும் எந்தவித காரணமும் சொல்லாமல் எந்த நேரத்திலும் பாலியல் தொழில் ஒப்பந்தத்தை முடித்து கொள்ளலாம். அப்படி செய்யும் போது, அவர்களுக்கான ஓய்வூதிய உரிமையை இழக்க மாட்டார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

பாலினத்தொழிலாளர்கள், இந்த வேலையை விடுத்து வேறு வேலைகளுக்கு செல்லவும் உரிமை உண்டு, அதற்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். மேலும் , அப்படி வேறுவேலைக்கு செல்லும் போது பாலியல் தொழில் பற்றி கூறவேண்டியதில்லை. அவர்களின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும்.

பணிநீக்கம் செய்யலாம் :

அதே போல, ஒரு பாலியல் தொழிலாளி 6 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் இருந்தால், அவர்களை பாலியல் நிறுவன உரிமையாளர் அவரை பணிநீக்கம் செய்யவும் உரிமை உண்டு என்றும் பெல்ஜியம் நாட்டு சட்ட வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாச நடிகர்களுக்கு…

இந்த சட்டமானது , ஆபாச நடிகர்கள், இணையதளம் வாயிலாக பாலியல் தொழில் செய்யும் நபர்களுக்கு பாலியல் தொழிலாளர் சட்டம் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டம் அமலாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்