AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்த நிலையில், நிலையத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

PM Modi Meets Macron, JD Vance

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

AI உச்சி மாநாடு

செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு 2025, பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் உலகளாவிய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட AI செயல்முறைகளை வழங்குதல், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த AI-ஐ உருவாக்குதல், மற்றும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவு கொண்ட உலகளாவிய நிர்வாகத்தை உறுதி செய்தல் போன்ற விஷயங்கள் அடங்கும்.

அதைப்போல மாநாட்டில் பேசிய ஜேடி வான்ஸ், AI வளர்ச்சியில் அதிக கட்டுப்பாடுகளுக்கு பதிலாக சுதந்திரமான அபிவிருத்தி தேவை எனக் கூறினார். இத்துடன், உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விவகாரங்களிலும் உரையாடல்கள் நடைபெற்றன.

மாக்ரோனின் சிறப்பு விருந்து

இன்று மாநாடு நடப்பதற்கு முன்பு நேற்று (பிப்ரவரி 10)  அன்று, பிரான்ஸ் அதிபர் மாக்ரோன், பாரிஸின் ஏலிசே அரண்மனையில் ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இதில் பிரதமர் மோடியும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்ஸும் கலந்து கொண்டனர். ஜேடி வான்ஸின் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடியுடனான இது முதலாவது நேரடி சந்திப்பு என்பதால் உலக அளவில் கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மோடியின் அடுத்த பயணம் அடுத்த பயணம் 

இங்கு பயணத்தை முடித்த பிறகு அடுத்ததாக பிரதமர் மோடிவரும்  பிப்ரவரி 12 முதல் 14 வரை,  அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அங்கு பயணம் மேற்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
donald trump angry
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor
kanja karuppu