ஆப்கானில் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தடை – தாலிபான்கள் அதிரடி உத்தரவு..!
ஆப்கானில் பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்த தலிபான்கள் தடை விதிப்பு.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் ஆட்சி சென்றது முதற்கொண்டு அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு தடை
பெண்கள் வெளியில் செல்வதற்கும், ஆடை அணிவதற்கும், கல்வி பயில்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெண்களின் உடலிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுதாது. அந்த வகையில் தற்போது பெண்கள் கருத்தடை சாதனம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வண்ண மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டது தான் கருத்தடை சாதனங்கள் என்றும், இதனை இனிமேல் பெண்கள் பயன்படுத்தக்கூடாது, மருந்தகங்களில் கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை மரங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.