ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிப்பு..! ஏற்கனேவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அதிரடி உத்தரவு..!
ரஷ்ய நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
பொதுவாகவே திருநங்கைகள், திருநம்பிகள் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றி கொள்வதில் மாற்று பாலின அறுவை சிகிச்சை மிக முக்கிய பங்கை அவகிக்கிறது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டதை சில திருநங்கைகள் விழா எடுத்து கொண்டாடுவதுண்டு. ஆனால் ரஷ்யாவில் தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளது.
இந்த மசோதா ரஷ்யர்கள் தங்கள் பாலினத்தை அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களில் மாற்றுவதைத் தடுக்கும். மருத்துவ சேவையை அணுக முடியாத இளைஞர்களிடையே தற்கொலை முயற்சிகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். LGBTQ அமைப்பை சேர்ந்தவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.