₹ 2,70,31,06,050.00 மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை திருடிய பலே திருடன் கைது

Default Image

கனடா:டொராண்டோவிற்கு அருகிலுள்ள ஹாமில்டன் நகரத்தில் உள்ள அமெரிக்கர் ஒருவரிடமிருந்து C$46 மில்லியன் ($36.5 மில்லியன்) மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைத் திருடியதாகக் கனடிய வாலிபர் கைது ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.

சிம் ஸ்வாப்பிங் எனப்படும் செல்போன் மோசடி மூலம் இந்த திருட்டு நடந்துள்ளதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடியானது பாதிக்கப்பட்டவரின்  தொலைபேசி எண்ணை ஹேக் செய்து  இரண்டு அடுக்கு செக்யூரிட்டி பாஸ்வ்வ்ர்டை இடைமறித்து இந்த நூதன திருட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த விசாரணையானது பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் அமெரிக்க ரகசிய சேவை மின்னணு குற்றவியல் பணிக்குழுவுடன் இணைந்து நடத்திய விசாரணையின் விளைவாக இந்த கைது நடந்ததாக ஹாமில்டன் போலீஸ் சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)