பிரேசிலில் 6 செ.மீ வாலுடன் பிறந்த பெண் குழந்தை
இன்று மருத்துவ துறை வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதற்கேற்றவாறு பல சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
வாலுடன் பிறந்த குழந்தை
அந்த குழந்தை சரியான எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது. ஆனால் குழந்தைக்கு பின்னால் 6 சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு வால் இருந்துள்ளது. இதனை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில், பிரேசில் நாட்டில் வாலுடன் குழந்தை பிறந்தது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளனர்.
அந்த வாழ் மிருதுவான தோளாக இருந்தாலும் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அதை ஊசியால் குத்திய போது குழந்தை அழுததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலில் உணர்ச்சி உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில் இது போன்ற குழந்தைகள் பிறப்பது அரிதான ஒன்று. முதுகு தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால் இவ்வாறு வாளுடன் குழந்தை பிறக்கும். முதுகு தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால், அந்த இடைவெளியில் தான் வாழ் உருவாகின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக மெக்சிகோவில் ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…