மும்பை தாக்குதல்… முக்கிய குற்றவாளி அசாம் சீமா பாகிஸ்தானில் உயிரிழப்பு.!

Azam Cheema

Azam Cheema : பாக்கிஸ்தானின் பைசலாபாத்தில் மாரடைப்பு காரணமாக லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவரான அசாம் சீமா (70 வயதில்) உயிரிழந்தான்.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவம் மற்றும் 2006ல் ஜூலையில் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய குற்றவாளியாக இருந்த லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறைத் தலைவர் அசாம் சீமா, மாரடைப்பு காரணமாக பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உயிரிழந்தான்.

Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்… IED வெடிகுண்டு.. அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்!

சமீப காலமாக லஷ்கர்-இ-தைபாவின் (லெட்) உளவுத்துறையை சார்ந்தவர்களின் தொடர்ச்சியான மர்மமான இறப்புகளுக்கு மத்தியில் அதன் முக்கிய நபரான அசாம் சீமா மரணமடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏஜென்சிகள் தான் பல லெட் செயற்பாட்டாளர்களைக் கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இந்த சூழலில் அசாம் சீமா உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

Read More – காசாவில் உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..104 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுவதில் அசாம் சீமாவின் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும், இந்தியா முழுவதும் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக்  கொண்டிருந்த நபர் அசாம்.

Read More – கனடா முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி காலமானார்..!

அல் கொய்தவுடனான உறவுகளுடன் அமெரிக்க கருவூலத் துறையால் நியமிக்கப்பட்ட ‘முக்கிய தளபதியான’ சீமா 2008ம் ஆண்டில் பாகிஸ்தானில் பஹவல்பூருக்கு லெட் கமாண்டராக பணிபுரிந்தான். அப்போது லஷ்கரின் மூத்த செயல்பாட்டாளர் ஜாக்கி உர் ரெஹ்மான் லக்வியின் செயல்பாட்டு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்