Categories: உலகம்

60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!

Published by
murugan

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார்.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்  தளத்தில் “தனது வருங்கால மனைவியுடன் கைகோர்த்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது காதலியுடன் நடந்து செல்வதை காணலாம். அந்த விடீயோவில் அவர் பேசுகையில், “இந்தச் செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் நான் செலவிட விரும்பும் ஒரு துணையை நான் கண்டுபிடித்தது மிகவும் அற்புதமானது” என தெரிவித்தார்.

அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!  

பிரதமர் பதவியை வகிக்கும் போது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை அல்பனீஸ் பெற்றார். 45 வயதான ஹெய்டனை முதன் முதலில் 2020 ஆம் ஆண்டில், மெல்போர்ன் வணிக விருந்தில்  சந்தித்தார். அது படிப்படியாக காதலாக மாறியது. இன்று தனக்கு வாழ்த்திய அனைவருக்கும் ஹைடன் நன்றி தெரிவித்தார்.

அல்பானீஸ் தனது முதல் திருமணத்தின் வழியாக நாதன் அல்பானீஸ் என்ற 23 வயது மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago