60 வயதில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களுக்கு நேற்றைய நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. 60 வயதான அந்தோனி அல்பானீஸ் தனது காதலியான ஹெய்டனுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த தகவலை அவரே சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார்.
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் “தனது வருங்கால மனைவியுடன் கைகோர்த்து செல்லும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு நிமிடம் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது காதலியுடன் நடந்து செல்வதை காணலாம். அந்த விடீயோவில் அவர் பேசுகையில், “இந்தச் செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் நான் செலவிட விரும்பும் ஒரு துணையை நான் கண்டுபிடித்தது மிகவும் அற்புதமானது” என தெரிவித்தார்.
அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!
பிரதமர் பதவியை வகிக்கும் போது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை அல்பனீஸ் பெற்றார். 45 வயதான ஹெய்டனை முதன் முதலில் 2020 ஆம் ஆண்டில், மெல்போர்ன் வணிக விருந்தில் சந்தித்தார். அது படிப்படியாக காதலாக மாறியது. இன்று தனக்கு வாழ்த்திய அனைவருக்கும் ஹைடன் நன்றி தெரிவித்தார்.
அல்பானீஸ் தனது முதல் திருமணத்தின் வழியாக நாதன் அல்பானீஸ் என்ற 23 வயது மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
❤️???? pic.twitter.com/jThfeCw3Eq
— Anthony Albanese (@AlboMP) February 15, 2024