பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முனையாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ்.
இசிடிஏ ஒப்பந்தம்:
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், பிரதமராக பதவியேற்றபிறகு முதன் முறையாக இந்தியா வர உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்காகவும், இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (ECTA) கையெழுத்திடவும் 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்திய வர உள்ளார்.
பதவியேற்றபின் முதல் முறை:
மார்ச் 8 முதல் 11 வரை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அல்பானீஸ், ஆஸ்திரேலிய பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன் முறை ஆகும். இதில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செனட்டர் டான் ஃபாரெல் மற்றும் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மேடலின் கிங், மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட வணிகக் குழு ஆகியோர் ஆஸ்திரேலிய பிரதமருடனான பயணத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா ஒற்றுமை :
இந்த பயணம் குறித்து அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான வலுவான ஒற்றுமை, நமது பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு நல்லது என்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, இந்தியா தொடர்ந்து நெருங்கிய நண்பராக இருக்கும்,” என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…