டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை தடை செய்யும் ஆஸ்திரேலியா.! சுகாதார அமைச்சர் தகவல்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை ஜனவரியிலிருந்து தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். வளரும் இளைஞர்களிடையே இந்த சாதனங்கள் மிகவும் பிரபலமடைவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகையிலையில் அதிகளவில் காணப்படும் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் நிரப்பப்பட்ட இந்த வேப்ஸ், ஒரு வகை இ-சிகரெட் ஆகும். சாதாரண புகையிலை போல வேப்ஸ்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் டிஸ்போசபிள் வேப்களின் இறக்குமதியை ஆஸ்திரேலியா ஜனவரி 1 முதல் தடைசெய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பெற்றோர்களே உஷார்..! 10 வயது குழந்தையின் மூளையை உட்கொண்ட அமீபா..! குழந்தையின் நிலை என்ன..?
இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை அமைச்சர், “வேப்ஸ்கள் ஒரு பொழுதுபோக்கு பொருளாக கடைகளில் விற்கப்படவில்லை. குறிப்பாக இது எங்கள் குழந்தைகளை இலக்காக கொண்டது அல்ல. ஆனால் இப்போது எங்கள் குழந்தைகள் இதற்கு இலக்கமாக மாறிவிட்டனர். பெரும்பாலான வேப்ஸ்களில் நிக்கோட்டின் உள்ளது. மேலும், இதற்கு பல குழந்தைகள் அடிமையாக வருகின்றனர்.” எனக் கூறினார்.
மேலும், “குழந்தைகள் உட்பட இளம் ஆஸ்திரேலியர்கள் மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக நிகோடின் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர். எனவே, டிஸ்போசபிள் வேப்ஸ் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தப்படாத வேப்ஸ்க்கும் மார்ச் மாதத்தில் தடை விரிவுபடுத்தப்படும்” என்று சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!
ஏனெனில் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வேப்ஸ்களை இறக்குமதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அனுமதி தேவைப்படும். தொடர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாதனங்களுக்கும் இந்த தடையை விதிக்கும் சட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.