தோல்வியடைந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டண உதவியைகுறைத்த ஆஸ்திரேலியா.!
ஆஸ்திரேலிய அரசு நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியாவில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக கல்வி அமைச்சர் டான் தெஹான் இந்த மாற்றங்களை அறிவித்தார். புதிய நடவடிக்கைகளின் படி, ஒரு பட்டத்தில் முதல் எட்டு பாடங்களில் குறைந்தது பாதி தோல்வி பெரும் மாணவர்கள் உயர் கல்வி கடன் திட்டத்திற்கான அணுகலை பெற முடியாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களது மூன்றாம் நிலை கல்விக்காக இதன் மூலம் ஆஸ்திரேலிய குடிமக்களும் பிற தகுதி வாய்ந்த மாணவர்களும் அரசாங்கத்திடமிருந்து பூஜ்ஜிய வட்டி கடன்களைப் பெற வேண்டும்.
2018 மற்றும் 19 நிதியாண்டில் 66.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹெல்ப் கடனை அரசாங்கம் வைத்திருந்தது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ‘ANU’ உயர் கல்வி நிபுணர் ஆண்ட்ரூ நார்டன் பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டில் ஏறக்குறைய ஆறு சதவீத மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தோல்வியடைகிறார்கள் என்று கூறினார்.