டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு முயற்சி! அறிக்கை வெளியிட்ட ஜோ பைடன்!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trump - Jo Biden

வாஷிங்க்டன் : நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

இதனால், அதிபர் வேட்பளருக்காக போட்டியிடும் டிரம்பும், கமலா ஹாரிஸுக்கும் இடையே போட்டியும் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்று முடிந்திருந்தது. அந்த விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸின் ஆதரவு பெருகி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்திற்கு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் 2 நபர்களுக்கு இடையேநடந்துள்ளது.மேலும், டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறுகின்றனர்.

ஆனாலும், அவர் அந்த இடத்திலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2-வது துப்பாக்கி சூடு சம்பவமாகும். இதற்கு முன் கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக அவருடைய வலதுகாதில் மட்டும் காயம் ஏற்பட்டது. தற்போது, 1 மாத இடைவெளியில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால், அமெரிக்காவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்ந்து தற்போதய அமெரிக்க அதிபரான ஜோபைடன் அவரது எக்ஸ் சமூக தளபக்கத்தில் இந்த சம்பவத்தை குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான இந்த கொலை முயற்சி குறித்த இந்த சம்பவத்தை என் குழுவினர் எனக்கு விளக்கினார்கள். இது குறித்து விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அதிபரை இந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ரகசிய சேவை அதிகாரிகளின் இந்த பணியை நான் பாராட்டுகிறேன். நான் பலமுறை கூறுவது போல் நம் நாட்டில் அரசியல் வன்முறைக்கு இடம் இல்லை. மேலும், தட்ரம்புக்கு ஆதரவாகவும், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க எனது குழுவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”, என பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்