மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகனை பிடிக்கும் முயற்சி.. 29 பேர் பலி..!
வடமேற்கு மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் ஜோவாகின் “எல் சாப்போ” குஸ்மானின் மகனை பிடிக்க ஏற்பட்ட மோதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
வடமேற்கு மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என அழைக்கப்படும் ஜோவாகின் “எல் சாப்போ” குஸ்மான் சினாலோவா மாநிலத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்பொழுது எல் சாப்போ மகனான ஓவிடியோ குஸ்மானை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஓவிடியோ குஸ்மானின் கைக்கூலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தாக்குதல் நடத்தியவர்களில் 19 பேர் மற்றும் ராணுவ வீரர்கள் 10 பேர் என 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ் கிரெசென்சியோ சாண்டோவல் தெரிவித்துள்ளார்.
ஒவிடியோ குஸ்மான் இராணுவ ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் மற்றும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார் என உள்துறை மந்திரி அடன் அகஸ்டோ லோபஸின் கூறியுள்ளார். இதற்கிடையில் செப்-2019 இல் ஒவிடியோ குஸ்மானை நாடு கடத்துமாறு அமெரிக்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.