உணவுக்காக காத்திருந்தபோது நேர்ந்த சோகம்.! காசா தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு.!

Israel Hamas War - Gaza attack

Gaza : கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய காசா நகர் மீதான இஸ்ரேல் தாக்குதல் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா நகரில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோர் ஆவார். ஹமாஸ் அமைப்பினரை முழுவதும் அழிக்கும் வரையில் காசா நகர் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

Read More – நாய் இறைச்சி சாப்பிடலாம்..! ஆனால் வளர்க்கக் கூடாது… அதிரடி தடை விதித்த நாடு

நேற்று வியாழன் அன்று காசா நகரத்து மக்கள் உதவிக்காக வடக்கு காசா பகுதியில் உள்ள குவைத் ரவுண்டானா பகுதியில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய படைகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 155 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என CNN செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More – இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்!

வடக்கு காஸாவில் அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் முகமது கிராப் இது குறித்து கூறுகையில், இன்னும் பலர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று கூறினார்.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து குறிப்பிடுகையில்,’ காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அதன் விளைவுதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!

காசா பாதுகாப்புப்படை செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தாக்குதல் பற்றி கூறுகையில், இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்க வேண்டும். வடக்கு காசா பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டின் காரணமாக நிவாரண உதவிக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்பாவி குடிமக்களை கொல்லும் கொள்கையை இஸ்ரேலியப் படைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன என குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்