Pakistan : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண கடற்படை தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அந்நாட்டின் 2வது மிக பெரிய கடற்படை தளம் மீது நேற்று பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. பலுசிஸ்தான் PNS சித்திக் கடற்படை தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் PNS சித்திக் கடற்படை தளத்தில் சுமார் 10 இடங்களில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கடற்படை, பாகிஸ்தான் எல்லை பாதுக்காப்பு படையினர் , பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில், இந்த தாக்குதலை நடத்தியது பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் BLA என்ற அமைப்பு என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருந்த இடம், அவர்களிடம் உள்ள வெடி பொருட்கள் உள்ளிட்டவை பற்றிய விவரங்களும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்தது.
இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை 4 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத தாக்குதலில் கடற்படை தளத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என பாகிஸ்தான் கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…