பாகிஸ்தான் கடற்படை மீது தாக்குதல்.. 10 இடங்களில் குண்டுவெடிப்பு.?

Pakistan NAVY attack

Pakistan : பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாண கடற்படை தளம் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில், பலுசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் அந்நாட்டின் 2வது மிக பெரிய கடற்படை தளம் மீது நேற்று பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. பலுசிஸ்தான் PNS சித்திக் கடற்படை தளம் மீது நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில்  PNS சித்திக் கடற்படை தளத்தில் சுமார் 10 இடங்களில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் கடற்படை, பாகிஸ்தான் எல்லை பாதுக்காப்பு படையினர் , பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை ஒன்று சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில், இந்த தாக்குதலை நடத்தியது பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் BLA என்ற அமைப்பு என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் இருந்த இடம், அவர்களிடம் உள்ள வெடி பொருட்கள் உள்ளிட்டவை பற்றிய விவரங்களும் கிடைத்துள்ளன. இதனை அடுத்து தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்தது.

இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இருந்து இதுவரை 4 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இத தாக்குதலில் கடற்படை தளத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என பாகிஸ்தான் கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்