டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்.!

Mette Frederiksen - pm modi

டென்மார்க் : டென்மார்க் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகன் சதுக்கத்தில் வைத்து, நேற்றைய தினம் பிரதம மந்திரி மேட் ப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இல்லாமல் தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மேட் ப்ரெடெரிக்சன் மீது, நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மீதான தாக்குதல் பற்றிய செய்தியால் ஆழ்ந்த கவலை அடைந்தேன். இந்த தாக்குதலை கண்டிக்கிறோம், எனது நண்பருக்கு நல்ல ஆரோக்கியம் பெற வேண்டுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஒரு படுகொலை முயற்சியில் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்