விமானப்படை தளத்தின் மீது தாக்குதல்! 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. பாகிஸ்தான் ராணுவம் தகவல்!
பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு பாகிஸ்தானின் மியான்வாலியில் அமைந்துள்ள பாகிஸ்தான் விமானப்படை (பிஏஎஃப்) பயிற்சி தளம் இன்று காலை தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும், பல தற்கொலை குண்டுதாரிகள் உட்பட பல ஆயுதமேந்திய ஜிஹாதிகள் விமானப்படை தளம் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த தாக்குதலில் டஜன் கணக்கான சிறிய மற்றும் பெரிய விமானங்கள் சேதமடைந்ததாகவும், பல இராணுவ வீரர்கள் மற்றும் விமானிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் சுவர்களில் ஏணியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நுழைந்து இந்த தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!
6 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், அப்போது தரையிறக்கப்பட்ட மூன்று விமானங்கள் மற்றும் ஒரு எரிபொருள் டேங்கரை சேதப்படுத்தியதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்திருந்தது. இருப்பினும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் பாகிஸ்தான் (டிஜேபி) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் விமானப்படையின் மியான்வாலி பயிற்சி விமான தளத்தில் தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் கூறுகையில், ஒன்பது தீவிரவாதிகள் கொண்ட குழு விமானப்படை தளத்தில் இன்று காலை தாக்குதல் நடத்தியதில் கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது.
தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் ஆயுதங்கள் ஏந்திய நிலையில் விமானப்படை தளத்தின் வேலிகள் சூழ்ந்திருந்த சுவர்களுக்குள் நுழைய ஏணியை பயன்படுத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் கூறுகையில், பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் செயல்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் எதற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், செயலப்பாட்டை இழக்க இருந்த 3 விமானங்கள் சேதம் அடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.