“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சீனாவில் ஏடிஎம் இயந்திரத்தில் தங்கத்தை உருக்கி அதன் விலையைச் சொல்லி, சில நிமிடங்களில் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

A gold ATM in Shanghai

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை யதார்த்தமாக மாற்றிய நாடு இது. இப்போது மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்றைச் செய்துள்ளது.

அது என்னவென்றால், சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கிங்ஹுட் குழு என்ற நிறுவனம் சார்பில், 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் ‘GOLD ATM’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானவுடன், அனைவரும் திகைத்துப் போனார்கள்.

இந்த ஏடிஎம் தங்கத்தின் எடை மற்றும் தூய்மையை நிகழ்நேரத்தில் மதிப்பிடு செய்து அதன் சந்தை மதிப்பை தீர்மானிக்கிறது. பின்னர் அந்த தங்க உருக்கி மற்றும் அதனை பணமாக பயனரின் வங்கிக் கணக்கில் சில நிமிடங்களில் மின்னணு முறையில் டெபாசிட் செய்கிறது.

இது  தொடர்பாக வீடியோவில், தங்க ஆபரணங்களை மெஷினில் வைத்தவுடன் அதன் அளவு மற்றும் தூய்மையை கணக்கிட்டு, அதை உருக்கி, உடனடியாக அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் 3 கிராம் – 1 கிலோ எடையுள்ள நகையை உருக்க முடியும்.

உலகளவில் தங்கத்தின் விலைகள் சாதனை அளவைத் தொட்டிருக்கும் நேரத்தில், இந்தப் புதிய ஏடிஎம் இயந்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பாரம்பரியமாக, தங்கத்தை விற்பனை செய்வது என்பது நகைக் கடைக்குச் சென்று, அதன் தூய்மையைச் சோதித்துப் பார்த்து, பணம் செலுத்துவதற்காகக் காத்திருப்பது போன்ற நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

இருப்பினும், இந்தப் புதிய ஏடிஎம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நீக்கி, வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை உடனடியாக விற்று அடுத்த நிமிடமே நமது வங்கி கணக்கில் பணமாக டெபாசிட் செய்கிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்