தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் இருக்கும் கிராமம் தான் லியாங்ஷூய்குன். இந்த கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் புதைந்த வீடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் உக்ரைன் தாக்குதல் – 13 பேர் பலி!
கிட்டத்தட்ட 200கும் மேற்பட்ட மீட்புதுறையினர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு பணி ஒரு பக்கம் நடந்துவரும் நிலையில், இன்னும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அதற்கான தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.
மேலும், வடமேற்கில் சீனாவின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டது . கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 149 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…