TURKEY : துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டு பணியாளர்கள் மற்றும் வேலை செய்து கொண்டு வந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட இந்த தீ விறு விறுவென அங்கு இருந்த மதுபானங்களால் பற்றி எரிய தொடங்கியது. இதன் காரணமாக வேகமாக அந்த கேளிக்கை விடுதியின் முழுவதுமே தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைவாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை கொடுத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
இருப்பினும், தீ மதுபானத்தில் பட்டு எரிந்ததால் தீயணைப்பதற்குள் அந்த கேளிக்கை முழுவதுமே தீயினால் இருந்தது. இந்த தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைப்போல, இந்த விபத்தில் 8 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் மிகவும் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் ஆபத்தானநிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து சம்பவம் குறித்து கேளிக்கை விடுதி மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…