சர்ச்சையில் ஆசிய மேப்! குட்டையை குழப்பிய சீனா..
இந்தியாவின் எல்லைப்பகுதிகளான காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குள்ளும், அருணாச்சல பிரதேசம் சீனாக்குள்ளும் இருப்பது போன்ற புதிய ஆசிய மேப் ஒன்றை சீனா அரசு தொலைக்காட்சி வெளியிட்டு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து பல எல்லை கட்டிடங்களையும் பலன்களையும் காட்டியுள்ளது. தற்போது சீனாக்குள் அருணாச்சல பிரதேசம் இருப்பது போல் உள்ள மேப் ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களை சீனா அமைத்து இருப்பது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்தது.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது சீனா இந்திய எல்லாவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் 15 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழி பாலம் ஒன்றையும் சில குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.