அதிகரிக்கும் வயதானவர்கள் எண்ணிக்கை.. சீனாவின் புதிய திட்டம் விரைவில் அமல்.!
சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே செல்வதால் , ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் தற்போது வரையில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதி தான் நிலவுகிறது. அதனால் மக்கள் தொகை விகிதம் குறைந்தாலும், வயதானவர்களின் எண்ணிகை அதிகரித்து சாதாரண ஓய்வூதிய செலவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்கிறது ஒரு சர்வே ரிப்போர்ட்.
வயதானவர்கள் எண்ணிக்கை :
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 280 மில்லியனிலிருந்து 2035ஆம் ஆண்டில் 400 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்றும், இது பிரிட்டன் மற்றும் ஐக்கிய மாகாணங்களின் மொத்த மக்கள்தொகைக்கு சமமான அளவுஎனவும் கூறுகிறது.
ஆயுட்காலம் :
ஆயுட்காலம் 1960களில் ஆயுள் சராசரி 44 ஆண்டுகளாக இருந்து, 2021ஆம் ஆண்டில் 78 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது, இது அமெரிக்காவை விட அதிகமாகும், மேலும் 2050இல் சராசரி இறப்பு வயது 80 ஆண்டுகளை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வயது உயர்வு :
இதனால், வயதானவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் செலவீனங்கள் அதிகரித்துள்ளது என கூறபடுகிறது. ஆதலால், ஓய்வு பெரும் வயதை உயர்த்துவதற்கான திட்டத்தை சீனா கவனித்து வருவதாக சீன தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அறிவியல் அகாடமியின் தலைவர் ஜின் வெய்காங் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெரும் வயது :
இது பற்றி சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவிப்பதாக இருந்தால், ஆண்களின் ஓய்வு பெரும் வயது 60 என்றும், அலுவலக பணியாளர் பெண்களுக்கு 55 என்றும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 50 வயது எனவும் ஓய்வு பெரும் வயது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பிரதமர் லீ கியாங் :
நாட்டின் புதிய பிரதமரான லீ கியாங், கடந்த திங்களன்று, சொற்பொழிவு ஒன்றில் பேசுகையில், விவேகத்துடன் கொள்கையை வெளியிடுவதற்கு அரசாங்கம் கடுமையான ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.
தற்போது, ஒவ்வொரு ஓய்வூதியமும் ஐந்து தொழிலாளர்களின் பங்களிப்புகளால் வழங்கப்படுகிறது. இந்த விகிதம் 2030இல் 4-க்கு-1 என்றும் 2050இல் 2க்கு 1 என்ற விகிதத்திலும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.