முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட 18 பேருக்கு பிடி வாரண்ட்..!
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளர்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தானாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவில் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவருடன் 18 கூட்டாளிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளில் போலி ஆவணங்களைச் சதி செய்தல், பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்தல் ஆகியவை அடங்கும்.