மோசடி வழக்கில் அர்ஜென்டினா துணை ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அர்ஜென்டினா துணை ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ், தனது பதவி காலத்தில் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டினா பொது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் இருந்து ஒரு பில்லியன் டாலர் மோசடி செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிக்குழு, கிறிஸ்டினாவிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அர்ஜென்டினா அரசின் பொதுபதவிகளில் இருக்க வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறையாகும்.