ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த ஆவார் . 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தஞ்சமடைந்திருந்தார்.தூதரகத்தில் இருந்தவாறு சமூக வலைத்தளத்தில் தனது கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். இதனால் இவர் சர்வதேச அளவில் பல நாட்டு அரசுகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
ஜூலியன் அசாஞ்சேவுக்கு அளிக்கப்பட்ட அடைக்கலத்தை திரும்ப பெறுவதாக ஈகுவடார் தூதரகம் தெரிவித்தது.இதன் பின்னர் லண்டன் காவல்த்துறைக்கு ஈகுவடார் தூதரகம் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யுமாறு வலியுறுத்தியது.
இதன் பின்னர் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது .அமெரிக்கா கோரிக்கை விடுத்த நிலையில் இங்கிலாந்து அரசு அசாஞ்சேவை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.