ஆப் ஸ்டோர் விளம்பரங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு, சுமார் 8.5 மில்லியன் டாலர் அபராதம்.!
ஐபோன்களின் ஆப் ஸ்டோர் விளம்பரங்களுக்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு, பிரான்சில் சுமார் $8.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில், வெளியாகும் தனிப்பட்ட தகவல் சேகரிக்கும் சில விளம்பரங்கள் தொடர்பாக, பிரான்ஸின் தனியுரிமை கண்காணிப்பு அமைப்பான CNIL, ஆப்பிள் நிறுவனத்திற்கு சுமார் $8.5 மில்லியன்(ஏறத்தாழ ரூ.70கோடி) அபராதம் விதித்துள்ளது.
ஐபோன் பயனர்கள் iOS 14.6 ஐப் பயன்படுத்தி, பயனர்களிடமிருந்து முறையான ஒப்புதலைப் பெறாமல் அவர்களின் தகவல்களைச் சேகரிக்கிறது என்று கண்காணிப்புக் குழு கூறியது. போன்களில் உள்ள விளம்பரங்களுக்கான அமைப்புகளில் (செட்டிங்ஸ்) முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டன என்பது போல் இயல்பாகவே(Default) அமைந்திருக்கிறது என்று CNIL தெரிவித்துள்ளது.