காதலர் எதிர்ப்பு வாரம்.! ஸ்லாப் டே முதல் பிரேக் அப் டே வரை.!
கடந்த ஒருவாரமாக காதலர்களின் வாரமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து கொண்டாடப்பட்டது. அதிலும் நேற்றைய தினமான பிப்ரவரி 14-ல் உலக காதலர் தினமாக கொண்டாடபட்டது. ஆனால், பிப்ரவரி 15ம் தேதியான (இன்று) முதல் வரும் பிப்ரவரி 21 வரை ‘காதலர் எதிர்ப்பு’ வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தந்த நாளுக்கான பெயர்களை பற்றியும் அன்று என்னென்ன செய்வார்கள் எனபது பற்றியும் பார்ப்போம்.
ஸ்லாப் டே (Slap Day) :
பிப்ரவரி 15ம் தேதியான இன்று தான் இந்த ஸ்லாப் டே கொண்டாடப்படுகிறது. இதுதான் காதலர் எதிர்ப்பு தினத்தின் முதல் நாள். இந்த தினம் நம்மை விட்டு சென்ற பழைய காதலன் அல்லது காதலியை அறைவதே இந்த ஸ்லாப் டே என்கிறார்கள். அதாவது அந்த பழைய நபர்களை (ex-ஐ) நிஜமாக அறைவது கிடையாது, அவர்கள் விட்டு சென்ற போது அவர்கள் கொடுத்த வலிகளை மறந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதே இந்த ஸ்லாப் டே என்கிறார்கள்.
அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!
கிக் டே (Kick Day) :
காதலர் எதிர்ப்பு வாரத்தின் இரண்டாம் நாளான நாளை (பிப்ரவரி 16ம் தேதி) கிக் டே என்கிறார்கள். இந்த நாளில் நம்மை விட்டு சென்ற அவர்கள் நமக்கு கொடுத்த நெகடிவ் நினைவுகளோடு சேர்த்து அவர்கள் நமக்கு அளித்த பரிசுகளையும் உதைத்து தள்ளுவதே கிக் டே என கூறுகிறார்கள்.
பெர்பியூம் டே (Perfume Day) :
இந்த காதலர் எதிர்ப்பு வாரத்தின் 3வது நாள் (பிப்ரவரி 17ம் தேதி) இந்த ‘பெர்பியூம் டே’ வருகிறது. இந்த நாளில் வெளியில் சென்று நீண்ட நாட்களாக வாங்கவிருந்த உங்களுக்கு பிடித்த பெர்பியூமையும் வாங்கலாம். இப்படி செய்வதனால் நம் மீது நமக்கு கவனம் செலுத்து தோன்றுகிறது.
பிளிர்ட் டே (Flirt Day) :
இந்த வாரத்தின் 4வது நாளாக பிப்ரவரி 18ம் தேதி கொண்டாடப்படுவதே இந்த பிளிர்ட் டே ஆகும். இந்த நாளில் நாம் நீண்ட நாட்களாக யார் மீது ஒருவித மறைமுக அன்பு வைத்துள்ளோமோ அதை எந்த வித பயமும் இல்லாமல் அவ்ரகள் மீது வெளிக்காட்டுவதே இந்த பிளிர்ட் டே ஆகும். இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் புதிய அனுபவத்தை உணர்வோம்.
கன்ஃபசன் டே (Confession Day) :
வாரத்தின் 5வது நாளாக பிப்ரவரி 19 ம் தேதி கொண்டாடப்படுவதே இந்த கன்ஃபசன் டே. அந்த நாளின் பெயரிலேயே உள்ளது போல நம் மீது புதிய காதலில் யாரேனும் வயப்பட்டால் நமக்கும் அந்த நபரை பிடித்தால் அதை ஒப்புக்கொள்ளலாம். மேலும், கடந்த காலத்தில் நாம் யாரையாவது காயப்படுத்திருந்தால், அந்நாளில் அந்த நபரிடம் மன்னிப்பும் கேட்கலாம்.
மிஸ்ஸிங் டே (Missing Day) :
இந்த வாரத்தின் 6வது நாளாக பிப்ரவரி 20ம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் யாரையாவது மிஸ் செய்கிரோம் என்றால் நாம் அதை அந்த நபரிடம் தெரிவித்து கொண்டு மகிழ்ந்து கொள்ளலாம்.
பிரேக் அப் டே (Break up Day ) :
இந்த வாரத்தின் கடைசி நாளாக கருதப்படும் பிரேக் அப் டே ஆனது பிப்ரவரி 21 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஒரு வேளை நமக்கு புடிக்காதவர்களுடன் காதலில் இருக்கிறோம் என்றாலோ? இல்லை நம்மை காதல் என்ற பெயரில் நம்மை வசப்படுத்தி வைத்திருந்தாலோ? அது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை பிரேக் அப் செய்து கொண்டு நாம் சுதந்திரமாக திரியலாம்.
எது என்னவோ…காதலில் உள்ளவர்கள் காதலர் தினத்தை கொண்டாடியது போல், காதலை பிடிக்காதவர்கள் காதல் எதிர்ப்பு தினத்தை கடைபிடியுங்கள். இல்லையென்றால் அடுத்த வரும் நல்ல காதலுக்காக காத்திருங்கள்…