நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் ஆண்டர்சன் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தான் அதானி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். காரணம், இந்த நிறுவனம் தான் இந்திய பங்குசந்தையில் அதிவேகமாக வளர்ந்து வந்த அதானி பங்குகள் குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய பங்குசந்தையையே ஆட்டம் காண வைத்தது.
இந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி நிறுவனனத்தை மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட பல்வேறு நிறுவனங்களின் மீது நிதி மற்றும் அந்நிறுவனங்களின் பொருளாதார கொள்கைகள் பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அங்கும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாட்டில் தடையாய் நின்றது.
இப்படியான ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க்கை அதன் உரிமையாளர் நாதன் ஆணடர்சன் மூடுவதாக நேற்று (ஜனவரி 15) அறிவித்துள்ளார். இந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தை நாதன் ஆண்டர்சன் 2017-ல் ஆரம்பித்தார். ஆரம்பித்து பல்வேறு அமெரிக்க மற்றும் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் சர்வதேச நிறுவனங்களை பற்றி ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிறுவனம் 2023-ல் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை அடுத்து தான் அதானி நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. பல பில்லியன் டாலர் வர்த்தக சரிவை ஹிண்டன்பர்க் நிறுவன ஆய்வு முடிவுகளை உண்டாக்கின. இதனால் இந்திய பங்குசந்தையே ஆட்டம் கண்டது. வரலாறு காணாத சரிவை நோக்கி சென்றது . இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் கோஷமிடும் அளவுக்கு இந்திய கள அரசியல் வரை ஹிண்டன்பர்க் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோல அமெரிக்காவில் சில நிறுவனங்களின் வர்த்தகத்தையும் ஹிண்டன்பர்க் அறிக்கை பதம் பார்த்துள்ளது.
இப்படியான பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனமானது மூடப்படுவதாக அதன் உரிமையாளர் நாதன் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், ” எனக்கு எந்தவித அழுத்தமும் வரவில்லை . இது பெரிய விஷயம் இல்லை. அரசியல் அச்சுறுத்தல்கள் இல்லை. உடல்நலப் பிரச்சினை இல்லை. பெரியஅளவில் தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை.” என்று நாதன் ஆண்டர்சன் ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார் .
மேலும், “உலகின் மற்ற பகுதிகளில் என்னைப்போல ஆய்வு செய்யும் நபர்களை என்னால் காண முடியவில்லை. இதுதான் எனது தீவிர கவனமாக இருந்தது. ஹிண்டன்பர்கை என் வாழ்வின் ஒரு அத்தியாயமாக தான் பார்க்கிறேன். அது என்வாழ்வில் ஒரு மைய விஷயம் அல்ல. தற்போது எனது கவனம் நாங்கள் எவ்வாறு ஆய்வு செய்தோம் என்பதை வரையறுத்து அதனை வெளியில் கொண்டுவருவது தான். ” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்பட்டதை அடுத்து அதானி பங்குகளின் விலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என சில பொருளாதார நிபுணர்களின் குறிப்புகள் கூறுகின்றன. இவ்வாறான கூற்றுகளின் உண்மை தன்மை வரும் நாட்களில் தெரியவரும்.