217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?
Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.!
ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 வயதான ஒருவர், கொரோனா தொற்று காலத்தில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்களை எடுத்துக்கொண்டதாக வெளியான தகவலை அடுத்து ஜெர்மனியில் உள்ள விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
READ MORE – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்
இது குறித்து லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்டது. அந்த நாளிதழ் கட்டுரைகள் மூலம் அவர்கள் அந்த மனிதனை அறிந்து கொண்டனர். இது தொடர்பாக Friedrich-Alexander-University (FAU) -ஐ சேந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நபரை பற்றி கண்டறிந்து அவரது நோய் எதிர்ப்பு சக்தியை ஆய்வு செய்தனர்.
READ MORE – இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்!
அந்த ஆய்வில் அவர், ‘எட்டு விதமான கோவிட்-19 தடுப்பூசிகளில் 217 டோஸ்களை எடுத்துக் கொண்டதாகவும், ஹைபர்வாக்சினேஷன் காரணமாக எந்த பக்க விளைவுகளையும் கண்டறியவில்லை’ என கண்டறியப்பட்டுள்ளது.