சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து கிளையை ரூ.99-க்கு வாங்கும் சர்வதேச வங்கி..!

Default Image

எச்எஸ்பிசி (HSBC) சர்வதேச வங்கி, மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து கிளையை 1 பவுண்டுக்கு வாங்குகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் ஒன்றான 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சிலிக்கான் வேலி வங்கி, கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அதன் கட்டுப்பாட்டாளர்களால் மூடப்பட்டது. தற்பொழுது மூடப்பட்ட சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து கிளையை, சர்வதேச வங்கியான ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) 1 பவுண்டுக்கு (ரூ.99) வாங்குவதாக தெரிவித்துள்ளது.

Readmore : அமெரிக்க பிரபல வங்கி ‘திடீர்’ திவால்.! சிலிக்கான் வேலி வங்கியின் இறுதி அத்யாயம்….

இதனை எச்எஸ்பிசி தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எச்எஸ்பிசி ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியாகும் “இந்த கையகப்படுத்தல் இங்கிலாந்தில் எங்கள் வணிகத்திற்கு சிறந்த மூலோபாய அர்த்தத்தை அளிப்பதாகவும், இது எங்கள் வணிக வங்கி உரிமையை பலப்படுத்துகிறது மற்றும் புதுமையான மற்றும் வேகமாக வளரும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் திறனை மேம்படுத்துகிறது”.

இவ்வளவு குறுகிய காலத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எட்டியதில் மகிழ்ச்சி அடைகிறோம். சிலிக்கான் வேலி வங்கியின் வாடிக்கையாளர்களை எச்எஸ்பிசி-க்கு வரவேற்பதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட்களை வழக்கம் போல் பாதுகாப்பாகத் தொடரலாம் என்று எச்எஸ்பிசி தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் மேலும் கூறியுள்ளார்.

சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து கிளை 3,000 சிலிக்கான் வேலி வங்கியின் வாடிக்கையாளர்களின் 8.1 பில்லியன் டாலருக்கும்  அதிகமான வைப்புத்தொகையுடன் சுமார் 6.6 பில்லியன் டாலர் கடன்களைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறியதாக இருந்தாலும், சிலிக்கான் வேலி வங்கி ஸ்டார்ட்அப்களின் உலகில் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்