ஆப்கானிஸ்தான் மசூதி அருகே வெடி விபத்து..! 11 பேர் உயிரிழப்பு..!

Afghanistan mosque explosion

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதிக்கு அருகே நடந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நபாவி மசூதிக்கு அருகே நடந்த தலிபான் மாகாண துணை ஆளுநரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெடி விபத்து நடந்துள்ளது. இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நபாவி மசூதிக்கு அருகில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு முன்னாள் தலிபான் காவல்துறை அதிகாரியும் ஒருவர் என்றும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் தலிபான்களால் நியமிக்கப்பட்ட உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்