ChatGPT மீது முதல் வழக்கு.? பொய்யான தகவலை வழங்கியதால் ஆஸ்திரேலிய முக்கிய பிரபலம் கடும் அதிருப்தி.!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT எனும் AI-இல் தவறான தகவல் பரப்பப்பட்டதாக கூறி அந்த தொழில்நுட்பம் மீது ஆஸ்திரேலிய பிரபலம் ஒருவர் வழக்கு தொடர உள்ளார்.
தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. அதாவது கூகுள் போன்ற தேடுதல் மென்பொறிகள் அதற்கான வெப்சைட்-ஐ தரும். ஆனால், AI தொழில்நுட்பம் பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது.
குற்றமற்றவர் :
ChatGPT-யிடம் ஒரு நபர் ஆஸ்திரேலிய மேயர் பிரையன் ஹூட் பற்றி தகவல் கூறுகையில், அவர் லஞ்சம் வாங்கியதற்காக சிறையில் பணியாற்றியதாக ChatGPT தவறான தகவல்களை அறிவித்துவிட்டது. உண்மையில், 2000களில் அவர் மீது சுமத்தப்பட்ட வெளிநாட்டு லஞ்ச ஊழலில் அவர் குற்றமற்றவர் என நிரூபித்து விட்டார்.
28 நாள் அவகாசம் :
இந்த தவறான தகவலை கூறியதை அடுத்து , ChatGPT நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளார். அதில் 28 நாட்களுக்குள் தவறை சரிசெய்து விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .
AI-இன் முதல் வழக்கு.?:
ஆனால் இதுவரை ChatGPT நிறுவனம் பதில் கூறவில்லை என பிரையன் ஹூட்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.