இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி.! பிரதமர் மோடியின் காலை தொட்டு மரியாதை.! வைரலாகும் வீடியோ…

Mary Millben - PM Modi

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமரின் பாதம் தொட்டு வணங்கினார். 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார்.

இறுதியாக வெள்ளை மாளிகையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, இறுதியாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை விழாவில் பாடினார்.  தேசிய கீதம் பாடிய பிறகு மில்பென் பிரதமர் மோடியின் பாதங்களை தொட்டு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வு குறித்து அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறுகையில், ‘ பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மற்றும் கனிவான மனிதர் என புகழாரம் சூட்டினார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin