இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட அளவு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வரும் வேளையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பயணத்துக்காக புறப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சில மணி நேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்விற்கு வந்திறங்கினார். அவரை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இஸ்ரேலில் உச்சக்கட்ட பாதுகாப்பு! ஆபத்தானதா அமெரிக்க அதிபரின் பயணம்?
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு , அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் ஒரே நாளில் 1400 இஸ்ரேலியர்களைக் கொன்றனர். அக்டோபர் 7ஆம் தேதி என்பது இஸ்ரேலுக்கு மோசமான நாள். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை விட ஹமாஸ் அமைப்பினர் மோசமானவர்கள். ஹமாஸை தோற்கடிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
இஸ்ரேல் மக்களுக்கு உங்களை (அமெரிக்கா) போன்ற ஒரு உண்மையான நண்பர் எங்களுடன் துணை நிற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு உங்கள் வருகை அனைவரது மனதையும் நெகிழ வைத்துள்ளது. நான் இஸ்ரேல் மக்கள் அனைவருக்காகவும் பேசுகிறேன். இன்றும் நாளையும் எப்போதும் அமெரிக்கா இஸ்ரேலுடன் நின்றதற்கு நன்றி என பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனை அறிவித்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருநாட்டு அதிபர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…