காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்!
Joe Biden : காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா செயல்படும் என்று உறுதி அளித்த அதிபர் ஜோ பைடன், இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார். இஸ்ரேல் – காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த போரை நிறுத்தக்கோரி உலக நாடுகள் பல முயற்சி எடுத்தும், பலன் அளிக்கவில்லை தாக்குதல் தீவிரமடைந்து தான் வருகிறது.
Read More – அமெரிக்கா எச்சரித்த போதும் அடம்பிடிக்கும் இஸ்ரேல்…
இதனால், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதில், குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது. இந்த நிலையில், காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு தனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்பின் அவர் கூறியாதவது, காசாவிற்கு பல்வேறு உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
Read More – ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க… பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கண்ணீர் மல்க கோரிக்கை!
காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து விரக்தியை வெளிப்படுத்திய பைடன், புனித ரமலான் மாதம் இந்த ஆண்டு, இது மிகப்பெரிய வலியின் தருணத்தில் வருகிறது. இதனால், புதுப்பித்தலுக்கான நேரம் இதுவாகும். காசாவில் நடந்த போரால் பாலஸ்தீன மக்களுக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது. இந்த போரால் 30,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
இதில் சிலர் அமெரிக்க முஸ்லீம்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர் முஸ்லீம்கள், சீக்கியர்கள், தெற்காசியர்கள் மற்றும் அரபு அமெரிக்க சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு எங்கு நடந்தாலும், இஸ்லாமிய வெறுப்பு மற்றும் சார்பு மற்றும் பாகுபாட்டின் உள்ளிட்டவையை எதிர்ப்பதற்கான முதல் தேசிய உத்தியை எங்களது நிர்வாகம் உருவாக்கி வருகிறது.
Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.!
எனவே, போர் தொடுத்துள்ள இரு நாடுகளின் தீர்வை உறுதிசெய்து, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைதியை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் சமமான சுதந்திரம், கண்ணியம் ஆகியவையை பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வது இரு நாடுகளின் தீர்வை பொறுத்தே உள்ளது எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.