உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா..! ராணுவ டாங்கிகளை அனுப்ப முடிவு..!

Default Image

உக்ரைனுக்கு உதவும் வகையில் ராணுவ டாங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு உதவும் வகையில் 31 – M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை (M1 Abrams Tanks) அனுப்ப அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். வசந்த காலம் நெருங்கி வருவதால் உக்ரேனியப் படைகள் தங்களின் பகுதியைப் பாதுகாக்கவும், ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காகவும் உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் முடிவை எடுத்துள்ளார்.

Joe Biden 1

ஜெர்மனி தனது சொந்த செலவில் 14 சிறுத்தை 2 A6 வகை (Leopard 2 A6) டாங்கிகளை அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து அமெரிக்ககா இந்த முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா தனது டாங்கிகளை அனுப்பும் வரை ஜெர்மனி தனது டாங்கிகளை அனுப்பாது என்று தெரிவித்துள்ளது.

M1 Abrams battle tanks 1

டாங்கிகளை வழங்குவதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் அவற்றை வாங்குவதற்கும், உக்ரேனிய வீரர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படும் என்று பைடன் கூறினார். உக்ரைன் தங்களது நிலங்களை மீட்பதற்காகவும் அவர்களை தற்காத்துக் கொள்ளத் தேவையான திறன்களை வழங்குவதற்கான முயற்சியின் தொடர்ச்சியாக இது அமையும் என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்