உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா .. ! மின்சாதன உபகரணங்களை வாங்க 53 மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!
ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி) வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் இவை அனைத்தும் விரைவில், குளிர்காலம் வருவதற்கு முன்னரே வழங்ப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
எனவே உக்ரைனியர்கள் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அமெரிக்கா வழங்கவிருக்கும் தொகுப்புகளில் விநியோக மின்மாற்றிகள், சர்க்யூட் பிரேக்கர்கள் மற்றும் பல இதர சாதனங்களும் அடங்கும்.